புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

144 0

புத்தளம் பகுதியில் இருநூற்று மூன்று கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் மதிப்பு  ஐந்து கோடிக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.