மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் !

111 0

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை(13) மாலை 4.30மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில்  இடம் பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர்  சிரேஷ்ட   சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன்:அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன் போது பலர் இக் கூட்டத்தில் கலந்து  கொண்டிருந்தனர்.