வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்க அமைச்சரவை அனுமதி

120 0
வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிகத் தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மீட்சி செயல்முறைக்கு அமையவும் நிதி அமைச்சின் பரிந்துரைகளுடனும்  இத்தடை நீக்கம்  2024  ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பல்வேறு கட்டங்களாக  செயற்படுத்தப்படவுள்ளது.