கிளப் வசந்த படுகொலை ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

85 0

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (13)உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று (13) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான அமல் சில்வாவும் அடங்குகின்றார்.

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.