குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

107 0

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை நீதிமன்றத்தில் இன்று (13) முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலத்திரனியல் விசா முறை தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், இலத்திரனியல் விசா முறையை அமுல்படுத்துவதைத் தடுக்கும் உத்தரவை அண்மையில் பிறப்பித்திருந்தது.