நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்று திடீரென கழன்று வீழ்ந்ததால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




