79 பறவைகளை விற்பனைக்காக கூண்டுகளில் அடைத்து வைத்திருந்த நபர் மீது சட்டநடவடிக்கை

104 0

காலியில் (Galle)  79 பறவைகளை கூண்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்த நபருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு காலி மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காலி வீதியில் உள்ள செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்லன்வில தள பாதுகாப்பு அதிகாரி சமன் லியங்கம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்போது, கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 79 சிறு பறவைகளையும் பெல்லன்வில சரணாலயத்தில் விடுவிக்குமாறு மேலதிக நீதவான் பெல்லன்வில பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.