இந்த முச்சக்கரவண்டி சாரதி கடந்த 40 நாட்களாக காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இறுதியாக பெண்ணொருவருடன் தனது முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ பாணந்துறை சலிந்து ” என்பவருக்குச் சொந்தமான பொருள் ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் இந்த முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொரு நபரொருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டில் இனந்தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, மற்றைய நபர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி அந்த கும்பலிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் சாட்சியாக இருந்த முச்சக்கரவண்டி சாரதி கடந்த 40 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்க விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

