இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் தொடர்பாகவே அவர் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

