உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு யாழில் நடைபவனி

20 0

ஶ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று (11) மாலை 3.30 மணிக்கு தற்கொலை தடுப்பு சுலோகங்களை தாங்கியவாறு விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமானது.

இந்நடைபவனி வீரசிங்கம் மண்டபத்தில் இருந்து கே.கே.எஸ் வீதி வழியாக சத்திரச் சந்தியை அடைந்து, அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். பஸ் நிலைய முன்றலை சென்றடைந்து. பின்னர் அங்கு கவனயீர்பு போராட்டம் நடைபெற்றது.