பிரிட்டனில் ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடி ; எதிர்ப்பை வெளியிட்டது சிறிலங்கா அரசாங்கம்

57 0
இங்கிலாந்தின் ஓவல்மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து சிறிலங்கா அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர்.

அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர்.

இந்த விடயத்தை பிரிட்டனின் உள்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பிரிட்டனிற்கான சிறிலங்கா தூதுவர் ரோகிதபோகொல்லாஹம தெரிவித்துள்ளார்.