தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 மே 18 உடன் அழிந்துவிட்டது எனக் கனவு கண்ட சிறிலங்கா இந்திய புலனாய்வுக்கட்டமைப்புகளிற்கும் உலகின் ஏகாதிபத்தியவாதிகளிற்கும் மிகப்பெரிய சவாலாக இன்றுவரை உள்ளது எதுவென்றால் அது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தூரநோக்கோடு உருவாக்கப்பட்ட அனைத்துலகக் கட்டமைப்புகள் ஆகும். அனைத்துலக மட்டத்தில் வீரியமாக செயற்படும் இந்தத் தமிழ்த் தேசிய அமைப்புக்களை சிதைத்து அழிக்காமல் தமிழீழம் என்ற இலட்சியக் கோட்பாட்டை அழிக்க முடியாது என்பதை இந்த நாசகாரச் சக்திகள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.
ஆகவே இரண்டு வழிகளில் இந்த தமிழீழக்கோட்பாட்டு அழிப்பு நடவடிக்கையை செய்யலாம் என அவர்கள் கருதினர். ஒன்று இந்த அனைத்துலக தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளின் இயங்குதளங்களாக செயற்படும் அனைத்துலகத் தொடர்பகம், நாடுகளின் கிளைகள் போன்றவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தவறான வழிநடத்தல் கட்டளைகளை வழங்கி அதனூடாக தமிழீழத்திற்கு சாவுமணி அடிக்கலாம் என்ற புலனாய்வு ஊடுருவல் பொறிமுறை. இந்த நடவடிக்கையை கடந்த 2021 இறுதிப்பகுதிவரை மிகவும் துட்பமாக மேற்கொண்டனர்.
ஆனால் அனைத்துலகக் கட்டமைப்புகளில் இருந்த,தேசியத்தலைவரின் சிந்தனையில் புடம்போடப்பட்ட நூற்றுக்கணக்கான தெளிவான சிந்தனையுள்ள தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்களால் இந்நடவடிக்கையின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அடுத்தது தற்போது நடைபெறும் நடவடிக்கை நேரடியாக மோதி அனைத்துலகக் கட்டமைப்புகளை சிதைத்து அழிப்பது. நேரடியாக அனைத்துலகக் கட்டமைப்புகளுடன் மோதுவது என களமிறங்கிய தமிழீழத்திற்கு எதிரான புலனாய்வுக்கட்டமைப்புகள் நெதர்லாந்து, பிரித்தனியா, சுவிஸ், ஜேர்மனி போன்ற நாடுகளைக் குறிவைத்துள்ளன.
ஆனால் பிரதான தளமாக சுவிசை மையப்படுத்திக் காய்களை நகர்த்தினர். சுவிஸ் கிளையைக் கைப்பற்றி அங்கு காலூன்றிவிட்டால் ஏனைய நாடுகளிற்கான பின் தள வழங்கற்பாதையாக சுவிஸ் இருக்கும் எனத் தப்புக்கணக்குப் போட்டு உடைப்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.
சுவிஸ் கிளையில் தேசியத் தலைவரின் சிந்தனையை உள்வாங்கி செயற்படும் நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் இருப்பதைக் கணக்கிடத் தவறிவிட்டனர். எதிரிகளின் புலனாய்வுப் போர் தொடங்கிய இடத்திலேயே அடித்து நொருக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் பலமாக இருக்கும் என நாம் நினைத்து 2வது 3வது தடுப்பு அணைகள் எல்லாம் போடப்பட்டது. ஆனால் தேவை ஏற்படவில்லை. முதலாவது லைனிலேயே சுருண்டு விட்டனர். இப்போது செய்வதறியாது திகைத்துக் கிடக்கின்றனர். தலைவரின் சிந்தனை என்னும் போராயுதம் எம்மை வழிநடத்துகிறது. எந்த எல்லைக்கும் போக நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் எங்களோட வேண்டாம் ஏனென்றால் நாங்கள் மேதகு பிரபாகரன் வழித்தோன்றல்கள்.
அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி