மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் கடந்த 30/08/2024 நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் ஆரம்பித்தது. பெல்சியம் லக்சாம்பூர்க், யேர்மனி, பிரான்சு நாடுகளில் இது வரை பல அரசியற் சந்திப்புக்களை மேற்கொண்டு நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.
இன்று (11.09.2024) காலை 9.00 மணியளவில் பாசல் மாநகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. பாசல் மாநகரில் இருந்து எழுச்சியோடு ஆரம்பமான ஈருருளிப்பயணம் சொலத்தூண் மாநிலம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பயணிக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு வேண்டிநிற்கிறோம்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”- தியாக தீபம் லெப் கேணல் திலீபன் .
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்