லசந்த தாஜூடீனை கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் – சிஐடியின் முன்னாள் தலைவர்

22 0
சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்கவையும்  வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சிஐடியின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வாசிம்தாஜூதீன் படுகொலை விசாரணைகளை அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்கள் தடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அந்த கொலை குறித்து உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவ்வேளை ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லைஎன அவர் தெரிவித்துள்ளார்.