புத்தளத்தில் 470 கிலோ உலர்ந்த மஞ்சள் தொகை மீட்பு

23 0

புத்தளம், சேரக்குளி கடற்கரை பகுதியில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் மார்க்கத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பின் போது, 470 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் தொகை (14 பொதிகள் ) கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.