மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள், ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவிப்பு

30 0
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற  ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் சம்மதம் இன்றி அவை நிறைவேற்றப்பட்டமையினால் அவற்றை நிராகரிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கை பல தசாப்தகால மோதல்களினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றினோம் என அவர் தெரிவித்துள்ளார்.