மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நெதர்லாந்தில் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,எழுச்சியோடு பயணித்து பெல்சியம் நாட்டினை ஊடறுத்து பல சந்திப்புக்களோடு பயணித்து,luxemburg மாநகரம்,வெளிவிவகார அமைச்சில் மனுக்கைளிக்கப்பட்டு,யேர்மனி நாட்டிற்குள் பயணித்து,Dillingen, Saarbrücken நகரங்களை ஊடறுத்து சந்திப்புக்கள் மற்றும் மனுக்கையளிப்புக்களைத் தொடர்ந்து Landau மாநகரில் ஈருருளிப்பயணம் மாலை நிறைவுபெற்றது.இன்று காலை (06.09.2024) 9மணியளவில் Landau மாநகரிலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமான ஈருருளிப் பயணமானது,landau நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து karlsruhe நகரை நோக்கி பயணிக்கிறது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதியினை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு வேண்டும் என்ற கொட்டொலிகளோடு பயணிக்கும் இவ்வெழுச்சிப் போராட்டத்தில் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வேணவாவினை உரமேற்று மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.
- Home
- முக்கிய செய்திகள்
- தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம்
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான சிந்தனைகள்!
May 11, 2025