கிளிநொச்சிக்குப் புதன்கிழமை (04) விஜயம் செய்த யாழ் இந்தியத் துணை தூதரக அதிகாரி குழுவினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான முருகேச சந்திரகுமார் அக் கட்சியின் தலைவர் சு.மனோகரன் உள்ளிட்ட குழுவினரைச் சமத்துவக் கட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சமகால அரசியல் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டதாகச் சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.