சுவிஸ் குடும்பஸ்தர் கொலை: சி.சி.டி.வி இரசாயன பகுப்பாய்வுக்கு!

110 0

வவுனியா கனகராயன்குளம் சின்னடம்பன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் சுவிஸில் இருந்து வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில் திருவிழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் வீடொன்றில் சுவிசில் இருந்து வந்தவரும் அவரது உறவினரும் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் இரவு மது போதையில் வீட்டில் தூங்கிய போது வீட்டுக்குள் நுழைந்தவர்களினால் ஒருவர் வீட்டிற்குள் இருந்து இழுத்து வரப்பட்டு வெளியே விடப்பட்டதன் பின்னர் மற்றவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டவருடன் வீட்டில் தங்கியிருந்தவரும் சுவிஸில் இருந்து அண்மையில் நாட்டிற்கு வருகை தந்து வவுனியா உக்கிளாங்குளத்தில் வசித்து வந்த நபர் ஒருவரும் கனகராயன்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை வீட்டில் இருந்த சி.சி.ரி.வி கமரா, இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.