மனைவியை பொல்லால் தாக்கி கொலை – கணவன் கைது

118 0

ஹபரணை, பலுகஸ்வெவ பகுதியில் மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்பாவல பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த  63 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, 66 வயதுடைய சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.