2023 ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களில் 23 சதவீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் கையிருப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

