இஸ்ரேல் திடீர் தாக்குதல் லெபனான் மீது நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் நிலைகளைக் குறிவைத்து 100 இஸ்ரேலிய பைட்டர் ஜெட் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
வடக்கு இஸ்ரேலில் பொதுமக்கள் மீது ஹிஸ்புல்லா பெரியளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை முறியடிக்கவே இந்த தற்காப்புத் தாக்குதல் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.Last night the IDF hit another Hezbollah weapons warehouse in Lebanon pic.twitter.com/duVhZ5z5iN— Documenting Israel (@DocumentIsrael) August 21, 2024 ஹிஸ்புல்லா பதிலடி இத் தாக்குதலால் லெபனானில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வடக்கு இஸ்ரேலை நோக்கி 320 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் பதிலடி கொடுத்தனர்.
அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் இடைமறித்து அழித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. வடக்கு இஸ்ரேல் பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்ட்டனர்.
இஸ்ரேல் முழுவதும் நேற்று அதிகாலை 6 மணி முதல் 48 மணி நேரத்துக்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவைகள் பெரிய அளவில் பாதித்தன. இந்த தாக்குதல்களால் லெபனானில் 3 பேரும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் போர் இந்நிலையில் இந்த தாக்குதல்களை மேலும் தொடர இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய இருவரும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தலைவர் ஹசன் நஹ்ருல்லா கூறுகையில், இஸ்ரேல் மீது தொலைதூர ஏவுகணை அல்லது துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயன்படுத்தும் எண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு கிடையாது. ஆனால், வரும் காலங்களில் இஸ்ரேல் மீது இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், நாங்கள் முழுமையான போரை எதிர்நோக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எதைச் செய்தும் எங்கள் நாட்டை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம், எங்களை காயப்படுத்த நினைப்பவர்களை நாங்கள் காயப்படுத்துவோம், இது [தாற்காலிக நிறுத்தம்] கதையின் முடிவல்ல என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தங்களைத் தற்காத்துக்கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அமரிக்கா தெரிவித்துள்ளது.

