சமூக ஊடகமாகவும் செய்தி பரிமாற்ற செயலியாகவும் விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பயங்கரவாத்துக்கு துணை நிற்பதாவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கைது குறித்து மற்றொரு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மீம் [MEME] ஒன்றுக்கு லைக் போட்டால் கூட உங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாவெல் துரோவ் பிரான்சில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு எக்ஸ் தளத்தின் ஏஐ தொழில்நுட்பமான GORK அளித்த பதிவையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் பாவெலுக்கு 20 வருடன் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயனர் ஒருவரின் பதிவை பகிர்ந்து, 20 ஆண்டுகளா.. என்று பதிவிட்டுள்ளார்.
Check out this ad for the First Amendment. It is very convincing. https://t.co/mb4UCSZcgR— Elon Musk (@elonmusk) August 24, 2024 POV: It’s 2030 in Europe and you’re being executed for liking a meme https://t.co/OkZ6YS3u2P— Elon Musk (@elonmusk) August 24, 2024 20 years … https://t.co/UknQRzqXw2— Elon Musk (@elonmusk) August 24, 2024 இதற்கிடையே பாவெல் துரோவின் கைது குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.
பெருமபாலான சமூக வலைத்தளங்களை மூலமும் தனி நபரோ குழுவோ சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது அவ்வப்போது வெளிச்சத்து வரும் நிலையில், டெலிகிராமை மட்டும் குறிவைப்பது, பாவெல் துரோவ் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுந்துள்ளது. மேலும் எக்ஸ் தலத்தில் பாவெல் துப்ரோவ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
Punk Pavel Durov got arrested. Why? Because he built a P2P social media app where people could exchange words without the worry of surveillance. He gave the power back to the people, creating an encrypted communication channel for them. The usage of such tools could be… pic.twitter.com/9tcZOuVY6k— hitesh.eth (@hmalviya9) August 25, 2024 “,

