ஊடகவியலாளர்களின் கடமை – பொறுப்புக்கள் தொடர்பில் யாழில் விசேட வேலைத்திட்டம்

106 0

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய விசேட பயிற்சி வேலைத் திட்டம் இன்று வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கலந்துக்கொண்டுள்ளார்.மற்றும் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்  தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றுள்ளார்.மேலும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஶ்ரீமோகன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.