ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூட்டு முயற்சி ; மற்றுமொரு சந்தேக நபர் கைது

99 0

ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிக்கடுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் தொடந்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹிக்கடுவை நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் கடந்த 14 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு துப்பாக்கிதாரிகள் அங்கிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றுள்ள நிலையில் துப்பாக்கி செயலிழந்ததால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கு வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.