இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கட்சியான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த வீரமணியை இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகித்த முதலாவது தமிழர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நாளை சனிக்கிழமை (24) பிற்பகல் 3 மணிக்கு யாழ். நகரில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே தமிழக அரசியல்வாதியும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்துள்ளார்.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி இ.த.விக்கினராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கி.வீரமணி நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
அத்தோடு, சிறப்புரையினை தென்னிந்தியத் திருச்சபையின் ஆயர் கலாநிதி வி.பத்மதயாளன் ஆற்றவுள்ளார்.






