2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் (78) இன்றிரவு (22) காலமானார்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.
யாழ் மாவட்ட முன்னால் முஸ்லீம் காங்கரஸ் பாராளுமன்ற உறுப்பினரான இவர், இம்முறை 2024 ஜனாதிபதி வேட்பாளரும் ஆவார்
ஜப்னா முஸ்லிம் இணையத்தின் நீண்டகால வாசகரான இவர் அவ்வப்போது ஜப்னா முஸ்லிம் பதிவேற்றும் செய்திகளுக்கு பின்னூட்டம் இடுபவராகவும் இருந்தார்.

