குருணாகல், நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடஹபொல – கட்டுபொத்த வீதியில் கடஹபொல பிரதேசத்தில் நேற்று (14) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
பரகஹகொடுவ, பஹமுனை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது, சடலம் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

