ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சுப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை (16) முதல் தொடங்கப்படும் என அரசாங்க அச்சக அதிகாரி கங்கா கல்பானி லியனகே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (15) வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னர், தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்ற பின் நாளை அரச அச்சகத்தில் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

