மாலபேயில் நச்சு வாயுவை சுவாசித்த இருவர் உயிரிழப்பு

118 0

மாலபே, கஹந்தோட்டை பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த இருவர் உயிரிழந்துள்ளார்கள்.

இருவரும் சில இரசாயனங்களை கலக்க முயன்றபோது வெளிவந்த நச்சு வாயுவை சுவாசித்ததால் திங்கட்கிழமை (12) மாலை உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை மற்றும் கஹந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  45 மற்றும் 63 வயதுகளையுடைய இருவரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலபே பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர்.