அம்பாறையில் மாணவன் மீது தாக்குதல்

115 0
அம்பாறையில் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர் குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் 6 மாணவர்களால்  வணிக பிரிவு மாணவன் மீது தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தாக்குதலுக்குள்ளான மாணவனின் உடலில் சிறு காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பாக அம்பாறை பொலிஸாரினால்  விசாரணை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.