சஜித்தை யாரும் ஆட்டுவிக்க முடியாது: ஹிருணிகா

89 0

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு வழங்கமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாக உள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கு வழங்கமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாஸவை தமது தேவைக்கு ஏற்ற வகையில் யாரும் ஆட்டுவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.