கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரிமத்தலாவ மற்றும் பெனிதெனிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று (11) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 35 வயது மதிக்கத்தக்க 06 அடி 04 அங்குல உயரமும் ஊதா நிற மேற்சட்டை மற்றும் சாம்பல் காற்சட்டையும் அணிந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் பேராதனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

