தீயை அணைக்கச் சென்ற இளம் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : சந்தேக நபர்கள் கைது

103 0
வீடொன்றில் தீ பரவியபோது, தீயை அணைக்க முற்பட்ட அவ்வீட்டின் உரிமையாளர் தீயில் விழுந்து, மின்சார கேபிளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்த வீட்டின் உரிமையாளரது மனைவி பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கொஸ்வத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.