எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை பெறுவதற்காக அறகலய போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அனைவரும் எதிர்பார்க்கும் இளம் தலைவரை முன்னிறுத்தி நாட்டை வழிநடத்த நாம் தயார்.
அறகலய போராட்டத்தின் போது இந்த நாட்டிலுள்ள அனைவரும் இளம் தலைவருக்கு இந்த நாட்டைக் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
இப்போது எமது கட்சி மிகவும் சுத்திகரிக்கப்பட்ட கட்சி.
போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இளைஞர்கள் எங்களிடம் வந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
இளைஞர்கள் அதிகமாக இருக்கும் கட்சி எங்கள் கட்சியாகும்.

