“கைத்தறி துறை என்பது திமுகவின் லட்சிய கொள்கை துறை” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

143 0

கைத்தறி துறை என்பது திமுகவின் தனிப்பட்ட துறை. மேலும், இது லட்சிய கொள்கை துறை,” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கைத்தறித் துறையின் சார்பில், 10-வது தேசிய கைத்தறி நாள் விழா சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, தலைமை வகித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: “அமைச்சர் காந்தி நீண்ட நெடுங்காலம் என்னுடன் அரசியலில் ஒன்றாக இருப்பவர். நான் உயர ஏணியாக இருந்தவர். எனது வாழ்க்கை தொடர்பாக வரலாறு எழுதப்பட்டால் அதில் ஓர் அத்தியாயத்தில், அவருக்கு முக்கிய இடமுண்டு. என்னுடனும் வீராசாமியுடனும் நட்புடன் இருந்தவர்.