ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளம் மீது மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதலில் அமெரிக்க இராணுவவீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
ஹமாஸ் தலைவர் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதி ஆகியோர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் விதத்தில் ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அல் அசாத் விமானப்படைதளத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலர் காயமடைந்துள்ளனர் போல தோன்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கிய அதிகாரிகள் தாக்குதல் இடம்பெற்றதை உறுதி செய்துள்ளனர்.
இதுவரை எந்த குழுவும் இந்த தாக்குதலிற்கு உரிமை கோரவில்லை.

