
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமேஜ் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி கூறும்போது, “இரவில் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதும் வீடே அதிர்ந்தது. வெளியில் எட்டிப் பார்த்தபோது கிராமமே வெள்ளத்தில் அடித்துச் சென்றது.
இதையடுத்து, உடனடியாக வீட்டிலிருந்து வெளியே வந்த நாங்கள் அருகில் உள்ள பகவதி காளி கோயிலில் தஞ்சமடைந்தோம். இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தோம். எங்கள் வீடு மட்டுமே தப்பிப் பிழைத்தது. என் கண் முன்னே எங்கள் கிராமத்தில் இருந்த்த அனைத்து வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன” என்றார்.

