வவுனியாவில் யானை தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

141 0

வவுனியா வடக்கு,  கற்குளம், பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பாெலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா வடக்கு கற்குளம் பட்டறை பிரிந்தகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாமையால்  சகிக்கிழமை (03) இரவு மகனை தேடி கிராம வீதியூடாக சென்ற பாேது  வீதியில் நின்ற யானை தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் பட்டறை பிரிந்தகுளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய என்பவராவார்.

இது தாெடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பாெலிஸார் மேற்காெண்டு வருகின்றனர்.