கம்பஹா, கெடவல அணைக்கட்டில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (03) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகம்பல பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் சிலருடன் சேர்ந்து கெடவல பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டில் நீராடச் சென்ற போது, அந்த இளைஞன் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

