வத்தளை, மஹாபாகே நீதிமன்றத்திற்கு அருகில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபாவை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெள்ளிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார்.
உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான பெயர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கும், அவரது சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் இலஞ்சம் பெற்றதாக இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

