நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 28.07.2024 ஞாயிறு அன்று உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 09.30 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக்கொடி ஏற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து. கழகங்களுக்குகிடையிலான போட்டிகள் ஆரம்பமானது.மொத்தமாக ஐந்து அணிகள் களத்தில் மோதிக்கொண்டன.
கலந்து கொண்ட அணிகள் :
2023 இன் வெற்றிக் கோப்பையை பெற்ற ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்
இரண்டாம் இடத்தைப் பெற்ற சுப்பர்கிங்ஸ் டென் கெல்டர் விளையாட்டுக் கழகம் . மற்றும் எல்லாளன் விளையாட்டுக் கழகம், மொக்கூஸ் விளையாட்டுக் கழகம் சொல்லமாட்டோம் விளையாட்டுக் கழகம்.
இறுதியாக 2024 இன் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டுப் போட்டியின் மூன்றாம் இடத்தை ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் I பெற்றுக்கொண்டது இறுதியாட்டுத்திற்கு டென் கெல்டர் விளையாட்டுக் கழகமும் எல்லாளன் விளையாட்டுக் கழகமும் மோதின இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சுப்பர்கிங்ஸ் டென் கெல்டர் விளையாட்டுக் கழகம் முதலில் பந்துவீச ஆரம்பித்தனர். எல்லாளன் அணி தனது ஐந்து பந்துப் பரிமாற்றத்தில் 31 ஓட்டங்களை குவித்தது அதனைத் தொடர்ந்து ஓட்டக் குவிப்பை ஆரம்பித்த சுப்பர்கிங்ஸ் டென் கெல்டர் விளையாட்டுக் கழகம் 2.3 பத்துப்பரி மாற்றத்தில் 33 ஓட்டங்களைகக் குவித்து 2024 இன் மாவீரர் நினைவு சுமந்த வன் பந்துத் துடுப்பாட்டுப் போட்டியின் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.
இந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருதை சாறுகனும் (ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்) சிறந்து பந்து வீச்சாளராக ஐங்கரனும் (ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்) பெற்றுக் கொண்டனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்தச் சுற்றுப் போட்டி தேசியக் கொடி கையளிப்புடன் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றது.