யேர்மனி கம்பூர்க்,எசன், முன்சமுன்சன்கிளட்பாக் ஆகிய நகரங்களில் உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை நினைவேந்தல்கள்.
கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு 27.07.2024 சனி அன்று உணர்வு பூர்வமாக நினைவுகூரப்பட்டது. பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து எம்மண்ணில் நடைபெற்றஇ தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திட்டமிட்ட தமிழின அழிப்பினையும்இ தொடர்ந்தும் எம் தமிழினம் அனுபவித்துவரும் அவலங்களையும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து தெரியப்படுத்தியதுடன் புகைப்படக் கண்காட்சிமூலம் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்தியம்பி எமது இந்த ஒன்றுகூடலின் நோக்கத்தையும் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது.அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றது.
கம்பூர்க்.(Hamburg)
முன்சமுன்சன்கிளட்பாக்(Mönchengladbach)
எசன்(Essen)