கண்டியில் விபத்து ; வயோதிபப் பெண் பலி ; 5 வயது குழந்தை உட்பட இருவர் காயம்

140 0

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகஸ்தோட்டை – பேராதனை வீதியில் கொஹாகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண்ணொருவர் மற்றும் 5 வயது குழந்தை மீது மோதி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றின் நுழைவாயில் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தின்போது, வயோதிபப் பெண்ணும் குழந்தையும் வேன் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பகுதியில் வசிக்கும் 76 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.