1983ம் ஆண்டு யூலை 23ம்நாள் அன்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட முறையில் சிங்கள காடையர்களால் தென்னிலங்கையில் ஆரம்பமான இனவெறியாட்டமானது தமிழர்கள் வாழ்ந்த பகுதி எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.
இந்த இனவெறித்தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் , தமிழ் மக்களின் வர்த்தக நிலையங்கள் தென்னிலங்கையில்
தீக்கிரையாக்கப்பட்டும்,உடமைகள் சிங்களக்காடையர்களால் சூறையாடப்பட்டது. தமிழர்களின் மனங்களின் ஆறாத வடுவாக பதியப்பட்ட கறுப்பு யூலை நாளானது பெல்சியநாட்டில் அன்வேற்ப்பன் மாநிலத்தில் பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற Operaplein 2000 Antwerpen என்னும் இடத்தில் 24.07.2024 அன்று நினைவு கூரப்பட்டதுடன் , இனவளிப்பை சித்தரிக்கின்ற கண்காட்சியும்,துண்டு பிரசுரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு, நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.








