எத்தியோப்பியா கனமழை: மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு

33 0

தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.