ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும்!

114 0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பேத்தி குடியரசுக்கட்சியின் மாநாட்டில் உரையாற்றியுள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டொனால்ட்டிரம்பின் மகளின் புதல்வியான ஹைடிரம்ப் தனது தந்தைக்கு முன்னதாக உரையாற்றியுள்ளார்.

எனது தாத்தாவின் நீங்கள் அறியதாத மறுபக்கத்தை பற்றி உங்களிற்கு தெரிவிப்பதற்காக நான் இங்கு உரையாற்றுகின்றேன்,என்னைபொறுத்தவரை அவர் எல்லா தாத்தாக்களையும் போன்றவர் பெற்றோர் கவனிக்காத நேரத்தில் இனிப்புகளை வழங்குபவர் என  டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார்.

 

பாடசாலைகளில் நாங்கள் சிறப்பாக கல்விகற்கின்றோமா என்பதை அறிவதில் அவருக்கு ஆர்வம் அதிகம்,என தெரிவித்துள்ள அவர் நான் பாடசாலையில் இருக்கும் வேளைகளில் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு எனது கோல்ப் விளையாட்டு குறித்து கேட்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

நான் பாடசாலையில் இருக்கின்றேன் என தெரிவித்ததும் அவர் பின்னர்  அழைப்பதாக  தெரிவிப்பார் என ஹய் டிரம்ப்தெரிவித்துள்ளார்.

பலர் எனது தாத்தாவை நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்,ஆனால் அவர் இன்னமும் உறுதியாக உள்ளார் என தெரிவித்துள்ள டிரம்பின் பேத்தி தாத்தா நீங்கள் எங்களிற்கு அப்படியொரு முன்னுதாரனம் உத்வேகம் நான் உங்களை நேசிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன ஆனால் அவர் யார் என்பது எனக்கு தெரியும் எனவும் ஹை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர் அன்புமிக்கவர் அக்கறை மிக்கவர்,இந்த நாட்டிற்கு மிகச்சிறந்ததை வழங்கவிரும்புகின்றார்,அமெரிக்காவை மீண்டும் மிகச்சிறந்த தேசமாக மாற்றுவதற்கு அவர் ஒவ்வொருநாளும் போராடுவார் எனவும் டிரம்பின் பேத்தி தெரிவித்துள்ளார்.