யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) புதன்கிழமை (17) காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.

கண்டிக்கு சென்றுள்ள பணிப்பாளர் நாயகத்தை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே வினால் வரவேற்கப்பட்டார்.

இங்கு குறுகிய விஜயத்தை மேற்கொண்ட பணிப்பாளர் நாயகம், ஸ்ரீ தலதா மாளிகை, பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தாவரவியல் பூங்கா போன்றவற்றுக்குச் சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள உள்ளார்.


