சிறுமியை அடித்து துன்புறுத்தும் காணொளி தொடர்பில் தாயார் உள்ளிட்ட 4 பெண்கள் கைது !

114 0

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சிறுமியொருவரை அடித்து துன்புறுத்தும் காணொளி  தொடர்பில் சிறுமியின் தாயார் உட்பட நான்கு பெண்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த காணொளி  தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது  இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 42 தொடக்கம் 78 வயதுடையவர்கள் என்பதுடன்  இவர்கள்  அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும்  இன்று புதன்கிழமை (17) மாவனல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் துன்புறுத்தப்பட்ட சிறுமி அவரது தந்தையின் பாதுகாப்பில் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.