2001 ஆம் ஆண்டு முத்துராஜா யானை அளுத்கம கந்த விகாரைக்கு புண்ணிய நடவடிக்கைகளுக்காக தாய்லாந்து நாட்டினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு அந்த யானை உடலியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரெயா என்ற விலங்கின நலன்பேண் பாதுகாப்பு அமைப்பு அரசாங்கத்திடம் முறைப்பாடளித்தது.
முத்துராஜா யானை தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ரெயா அமைப்பு இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகத்தில் முறைப்பாடளித்தது.
அதனை தொடர்ந்து இந்த யானை மீண்டும் தாய்லாந்துக்கு 2023 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், யானை தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டு ஒரு வருடமாகிய நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.
யானையின் பின்பகுதியின் இருபுறமும் வீங்கி சீழ் வடிகிறது. யானை நடையின்றி இருப்பதால் வளைக்கப்படாத மற்றும் கடினமான இடது முன்காலுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் யானையை முடமாக்கிவிடும்.
இந்நிலையில், காயம் மற்றும் சீழ் வடிதல் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வழக்கமான சிகிச்சைகளினால் இடுப்பின் இருபுறங்களிலும் உள்ள வீக்கம் முழுமையாகக் குணமடைந்துள்ளன, ஆனால் மிகவும் நுட்பமான சிகிச்சையாக நடை சரிசெய்தல் உள்ளது என தாய்லாந்து தூதர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளார்.

